Saturday 18th of May 2024 08:04:07 PM GMT

LANGUAGE - TAMIL
கோவில்கள் மனித மேம்பாட்டை  வளர்க்கும் இடமாக மாறவேண்டும்!!

கோவில்கள் மனித மேம்பாட்டை வளர்க்கும் இடமாக மாறவேண்டும்!!


கோவில்கள் வெறுமனே மத வாழிபாட்டிற்குரிய இடமாக இல்லாமல் மனித மேம்பாட்டிற்கான இடமாக மாறவேண்டும் என மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவிர்தார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற இந்து ஆலய அறங்காவல்களின் மாநாடு தொடர்பான ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

சைவர்கள் யாருடைய ஆதரவும் இல்லாமல் தமது சொந்த நாட்டிலும் வெளிநாட்டிலும் வசிக்கிறார்கள். இன்று ஆட்சி எவ்வாறு அமைய வேண்டும் என்று பௌத்த கோவில்களிலே தீர்மானிக்கிறார்கள். தேவாலயங்களிலே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை பாதிரியார் சொல்லிகொடுக்கிறார். மசூதிகளில் இமாம் சொல்லி கொடுக்கிறார்கள்.

சைவக்கோவில்களில் அப்படி சொல்லிகொடுக்கும் வரலாறு இல்லை. பூசை அனுட்டானங்களுடன் குருக்களும் ஆலயத்தின் ஆட்சியை கவனிப்பதில் அறங்காவலர்களும் நின்று விடுகிறார்கள்.

சைவர்களைப் பொறுத்தவரை எதிர்காலத்தில் தீர்மானிக்க கூடிய வலுவுள்ள சைவப்பிரதிநிதித்துவத்தை பெறாமல் இருந்திருக்கிறார்கள்.

எனவே கோவில்கள் வெறுமனே மதவாழிபாட்டிற்குரிய இடமாக இல்லாமல் மனித மேம்பாட்டிற்கான இடமாக மாறவேண்டும்.

வன்னியில் சைவர்களிற்கு எதிராக பல்வேறு கொடுமைகள் இடம்பெற்றுவருகிறது. நாடாளுமன்றிலே சைவர்களை பற்றிப் பேசுவதற்கு இன்று யாரும் இல்லை.

இன்று மக்களிற்கு சரியான வழிகாட்டல்கள் இல்லை குறிக்கோள்கள் இல்லாமல் இன்றய இளைஞர்கள் இருப்பதால் போதை பழக்கம், தற்கொலை உட்பட பல்வேறு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. எனவே மண்ணின்வளம் மண்ணின் பெருமை அந்த மரபுகளை வைத்திருக்கவேண்டிய இடமாக கோயில்கள் இருக்கவேண்டும்.

உங்களுக்கு வாக்களித்து உங்களை தெரிவு செய்தோம். எங்களுடைய பகுதியில் ஒர் பிரச்சனை இருக்கிறது. வாருங்கள் எமக்கு தீர்வினை பெற்றுத்தாருங்கள் என வடக்கை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் தெரிவித்தோம்.

எங்களது பகுதியில் ஒர் பிள்ளையார் ஆலயம் உள்ளது அதற்கு முன்பாக அந்தோனியார் சிலையினை வைக்கின்றனர் , விவேகானந்தர் சிலையினை உடைக்கின்றனர் என தெரிவித்தோம். ஆனால் வேப்பமரத்தினையும் மாமரத்தினையும் கல்லையும் மண்ணையும் வணங்கும் உங்களுக்கு இது எல்லாம் தேவையா? என குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

அவர் சைவ மக்களின் வாக்குகளை பெற்று சைவர்களின் ஆதரவினை பெற்று தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்.

திருக்கேதீஸ்வர வளைவு உடைந்தமை தொடர்பாக எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இதுவரையில் குரல் கொடுக்கவில்லை.-என்றார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE